இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில், 'ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம்' என்ற மாநில அளவிலான அடிப்படை முதலுதவி பயிற்சி துவக்க விழா, காணொளி வாயிலாக காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு. மனோகரன் தலைமை வகித்து பேசுகையில், இப்பயிற்சி தினமும் எல்லா மருத்துவர்களின் கிளினிக்கிலும், மருத்துவமனையிலும் நடத்தப்படும்.
நடப்பாண்டு இறுதிக்குள் 100 சதவீத இலக்கை அடைய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வே. பாலகிருஷ்ணன் பயிற்சியை துவக்கி வைத்தார்.
பொருளாளர் பேராசிரியர் டாக்டர் வே. ஞானகணேஷ் மார்பளவு செயற்கை மனித உடல் அமைப்பை வைத்து, அடிப்படை முதலுதவி எவ்வாறு செய்வது என்று செயல்முறை விளக்கம் அளித்தார்.