காயரம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் தினமும், மறைமலைநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் பணிக்குச் சென்று வருகின்றனர். இந்த சாலையில் கூடலூர் -- கலிவந்தபட்டு இடையே 2 கி.மீ. தூரம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், புழுதி அதிக அளவில் பறப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த தார்ச்சாலை பழுதடைந்து, மண் சாலையாக மாறி உள்ளது. புதிதாக இந்த சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி வருகின்றனர். கல்லுகள் பெயர்ந்து, வாகனங்களை இயக்க சவாலாக உள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.