கருங்குழியில் துண்டு பிரசுரங்கள் வழங்கிய அதிமுக நிர்வாகிகள்

மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகளை அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் கருங்குழி பேரூராட்சி பகுதியில் அதிமுகவின் பத்தாண்டு சாதனைகளை அடங்கிய துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக சென்று பொதுமக்கள் மற்றும் சிறு குறு வியாபாரிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், கருங்குழி பேரூர் கழக செயலாளர் ஆர். டி. ஜெயராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், இவர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து மற்றும் வியாபாரிகளிடம் அதிமுகவின் பத்தாண்டு சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், மற்றும் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி