காஞ்சிபுரம் மாவட்டம், மதுவிலக்கு அமல்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், நேற்று, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கெமிக்கல், சலவை சோப்பு தயாரிக்கும் கம்பெனி, மருந்தகம், பெயின்ட் கம்பெனி மற்றும் கிடங்குகளில் மெத்தனால் மற்றும் எத்தனால் விற்பனை செய்யப்படுகிறதா என, பார்வையிட்டார்.
அப்போது கடை உரிமையாளர்களிடம், அரசிடமிருந்து முறையான அனுமதி பெற்று மெத்தனால், எத்தனால் விற்பனை செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் விற்பனை செய்வது தெரியவந்தால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் எச்சரிக்கை விடுத்தார்.