அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய அதிமுக பூத்கமிட்டி ஆய்வு பணி

அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆய்வு பணி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி படிவம் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்பணியானது இராமாபுரம், எல். எண்டத்தூர், செம்பூண்டி, கிளியாநகர், பாதிரி, அகிலி, பள்ளிப்பேட்டை, ஊனமலை ஆகிய பகுதிகளில் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் விவேகானந்தன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சீனிவாசன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து படிவத்தை ஆய்வு செய்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய பொருளாளர் ராமாபுரம் அய்யாப்பன், மாவட்ட பிரதிநிதி செம்பூண்டி சேகர், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய துணைத் தலைவர் சேரன் உள்ளிட்ட கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி