கல்பாக்கம்: புத்தாண்டு கொண்டாட்டம்..கடலில் மூழ்கி இரட்டையர்கள் பலி

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் நகரியத்தில் உள்ள கடலில் குளிக்கும் போது இரட்டை சகோதரர்களான இரண்டு பள்ளி மாணவர்கள் நிவாஸ் வயது 16, நித்தீஷ் வயது 16 ஆகிய இருவரும் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் கடல் அலையில் சிக்கித் தவித்தவர்களை மீட்டு கரை சேர்த்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து முதலுதவிக்காக சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு சிறுவர்களும் இறந்து விட்டதாக தெரிவித்ததின் பேரில் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்து கல்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆங்கில புத்தாண்டில் ஒரே வீட்டில் இரண்டு சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி