செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அருகே பெரியவெளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (52) என்பவர், லத்தூர் கிராமத்தில் விவசாய கிணறு துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார். கிணற்றின் உள்ளே வேலை செய்தபோது மண் மற்றும் பாறை சரிந்து அவர் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.