இந்நிலையில், வண்டலுார்-- - வாலாஜாபாத் நெடுஞ்சாலையோரம், 5 ஏக்கர் ஏரி இடத்தை ஆக்கிரமித்து நர்சரி கார்டன், உணவகம், வணிக கடைகள் கட்டப்பட்டன. 2015ம் ஆண்டு, இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அதன்பின், ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், அம்மன் சிலை வைக்கப்பட்டது. மேலும், தனியார் லாரிகள் இந்த இடத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டன.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
படப்பையில் மேம்பாலப் பணி நடப்பதால் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அரசு பேருந்துகள் நின்று செல்ல, படப்பை பஜார் பகுதியில் போதிய இடமில்லை.
இந்த இடத்தை பேருந்து நிலையமாக மாற்றினால், நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க முடியும். மேலும், அப்பகுதி மக்களுக்கும் உதவியாக இருக்கும். மேலும், படப்பை பஜார் பகுதியில் நெரிசல் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.