இந்த தடுப்பணையில், சில ஆண்டுகளாக மணல் தோர்ந்து பள்ளமான ஆழ பகுதிகள் மூடப்பட்டு அணை உயரத்திற்கு மணல் தேங்கி உள்ளது. இதனால், பருவ மழை காலம் மட்டுமின்றி சாதாரண மழைக்கும், ஆற்றில் நீர் வரத்து இல்லாமலே, இத்தடுப்பணை நிரம்பி விடுகிறது. ஆறு அடி உயரத்திற்கு கட்டப்பட்ட பழையசீவரம் பாலாற்று தடுப்பணை, தற்போது ஒரு அடி உயரம் ஆழம் கூட இல்லாமல், மணல் மூடி உள்ளதால் சிறு மழைக்கே அணை நிரம்பி, அடுத்த ஒரு சில தினங்களில் தண்ணீர் வற்றி போகிறது. எனவே, வரும் பருவமழை காலத்திற்குள், பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில், அணை உயரத்திற்கு குவிந்துள்ள மணலை தோண்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாலாற்று பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரணிக்குள் புகுந்த கார் மோதி ஒருவர் பலி: 16 பேர் படுகாயம்