ராமாபுரத்தைச் சேர்ந்த புஷ்பா (37) என்பவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு, வீட்டின் மொட்டை மாடியில் தலையில் காயங்களுடன் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார். இது தொடர்பாக, புஷ்பாவின் கள்ளக்காதலன் கார்த்திக்கை ராமாபுரம் போலீஸார் தேடி வந்தனர். நேற்று, திருவண்ணாமலையில் பிச்சைக்காரர்களுடன் இருந்த கார்த்திக்கை போலீஸார் கைது செய்தனர். இந்தக் கைது நடவடிக்கையால், புஷ்பாவின் கொலை மர்மம் விலகியுள்ளது.