ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில உள்ளிருப்பு போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தவித பணிகளும் மேற்கொள்ளவில்லை எனவும் மாதாந்திர கூட்டம் நடைபெறவில்லை எனவும் போலியாக ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக் போலி கையொப்பம் போட்டு மோசடியில் ஈடுபட்டு ஊழல் செய்து வருவதாகவும் இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏடிபி பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கோரி துணைத் தலைவர் ரேகா தலைமையில் கவுன்சிலர்கள் காலை முதல் இரவு முழுவதும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறிப்பாக துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் கையெழுத்தை போலியாக தலைவர் பவானி கார்த்திக் கையெழுத்து போட்டு தீர்மானம் நிறைவேற்றி பல லட்சம் ஊழல் செய்ததாக அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். குறிப்பாக போலி கையெழுத்து போடப்பட்ட தீர்மானத்தை எடுத்துக் கொண்டு ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் புகார் அளித்ததால் அதிகாரிகள் உண்மைதான் என தெரியவந்தது அடிப்படையில் தலைவர் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை ரத்து செய்திருப்பதாக கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக அடிப்படை வசதிகூட வாக்களித்த மக்களுக்கு செய்ய முடியவில்லை என வேதனை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி