செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவன் ஆயிஷ் மிஸ்ரா, கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரிக்கு சரியாக வராததால் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாகவும், அதன்பின் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் இந்த துயர முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. மறைமலைநகர் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.