செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்த அழகேசன் (45), கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த இனோவா கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இனோவா கார் ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் காவல் நிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.