செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் லொயலா மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி இயங்கி வருகின்றது. இந்தப் பள்ளியில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீ பாதுகாப்பு, வெள்ள பாதுகாப்பு, விஷவாயு பாதுகாப்பு, ஒரு மனிதன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தால் அவருக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது, சிறு குழந்தைகள் குளம், கிணறு ஆகிய இடங்களில் தவறி விழுந்தால் எப்படி காப்பாற்றுவது, குழந்தைகளுக்கு எந்த மாதிரி முதலுதவி செய்ய வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வகையில் மனித உருவம் கொண்ட பொம்மை மற்றும் குழந்தை உருவம் கொண்ட பொம்மையை வைத்து பேரிடர் மீட்பு குழுவினர் மாணவர்களுக்கு செய்து காட்டினர்.
பின்பு மாணவர்களை அழைத்து எப்படி செய்ய வேண்டுமென மாணவர்களே செய்து காட்டவும் பயிற்சி அளித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களில் பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.