பவுஞ்சூரில் ஆதார் சேவை மையத்தை திறந்து வைத்த எம் எல் ஏ

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் பகுதி மக்கள் ஆதார், ரேஷன் அட்டை, முதியோர் உதவித்தொகை, விவசாய அட்டை, மின் இணைப்பு போன்ற பல்வேறு சேவைகளுக்காக செய்யூர் தாலுக்கா அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. இதைத் தவிர்க்க, பவுஞ்சூரில் இ-சேவை மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் செய்யூர் தொகுதி விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மூ. பாபு அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம் ஒன்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார். இந்த மையத்தில் வழங்கப்படும் சேவைகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் அவர் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே. எஸ். ஆர் கார்த்திகேயன், எம். எஸ். பாபு, சிற்றரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி