இந்த விழாவை யொட்டி கடந்த புதன்கிழமை மாலை மங்கல இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் எஜமானர் சங்கல்பம், பகவத்பிரார்த்தனை, புண்யாவாசனம், அங்குரார்பணம், வாஸ்துசாந்தி, யாகபூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, இன்று விஸ்வரூபம், கும்பாராதனம், யாகபூஜை, கும்பம் புறப்பாடு உள்ளிட்ட பூஜைகளுடன் கோபுர கலசங்களுக்கும் 43 அடி உயர உக்கிர நரசிம்மர் சிலைக்கும் பட்டாச்சாரியார் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று பின்பு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்மர் கோயில் அறக்கட்டளை நிர்வாகி வேணுதாஸ் சாமிகள் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்து சிறப்பாக நடத்தி இருந்தனர்.