இந்தக் கூட்டத்தில் மதுராந்தகம் நகரச் செயல் தலைவராக டாக்டர் ஜீவா எஸ் ஆனந்த், நகர பொருளாளர் கிருஷ்ணன், நகர பொதுச்செயலாளர் கங்காதரன், நகர செயலாளர் ஹரிதாஸ், நகர துணைச் செயலாளர்கள் ஷேக் அயூப், சேகர் ஆகியோர்களுக்கு மதுராந்தகம் நகர காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதிய மதுராந்தகம் நகர நிர்வாகிகளை அறிவித்த மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் கிறிஸ்டோபர் ஜெயபால், மதுராந்தகம் நகர தலைவர் லோகு, அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.