மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், கருங்குழி, மேலவேலம்பேட்டை, சோத்துப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்தி