செங்கல்பட்டு: கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்குச் சேர்ந்த தொன்னாடு கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகள் யோகஸ்ரீ (10) அதே கிராமத்தில் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி யோகஸ்ரீ இவருக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். இவர் தங்கள் மாட்டை வயல்வெளியில் கட்டி வைத்திருந்தனர். 

கட்டி வைத்திருந்த மாட்டுக்கு தண்ணீர் வைப்பதாகச் சென்ற பொழுது அங்கு அருகில் இருந்த விவசாய கிணற்றில் கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். மகள் வீட்டுக்கு வராததால் மகளைத் தேடிச் சென்ற பெற்றோர் அவர் எடுத்துச் சென்ற வாலி கிணற்றில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

சந்தேகத்தின் பேரில் செய்யூர் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து கிணற்றில் தேடிய போது சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேதத்தை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி