மதுராந்தகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் சென்னை ஷோபா பத்ம சலானி பவுண்டேசன், ராஜன் கண் மருத்துவமனை மற்றும் சென்னை விஷன் சாரிடெபிள் அறக்கட்டளை ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் கண் புரை பரிசோதனை, கண்ணில் நீர் வடிதல், கண்ணில் சதை வளர்ச்சி, கண் நீர் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சென்னை ராஜன் ஐ கேர் மருத்துவமனை கண் மருத்துவர் சுபம் தலைமையில் 15 மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். 

284 நோயாளிகள் கலந்து கொண்டு பல்வேறு கண் நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர். 29 நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டவர்களை வாகனத்தின் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு இலவசமாக அறுவை, மருந்துகள், உணவு தங்குமிடம் ஆகியவை அளிக்கப்பட உள்ளது. 

110 நோயாளிகளுக்கு உயர்தர மூக்குகண்ணாடிகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஷோபா பத்ம சலானி அறக்கட்டளை நிர்வாகிகள் ஷோபா பத்ம சலானி, அஜித் பூஜா சலானி, மம்தா அபிலாஷ் முத்தா, ஸ்ப்னா பவான் கோச்சார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி