அதன் அடிப்படையில் 39 நெல் கொள்முதல் நிலையங்களிலும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் கோரப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டும் தற்போது வரை நெல் கொள்முதல் செய்யாமல் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் முளைத்துள்ளது. சுமார் 35 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாததால் 5000 நெல் மூட்டைகளுக்கு மேல் வீணாகப் போகும் நிலை உள்ளது. தனியார் வியாபாரிகளிடம் நெல் விற்பனை செய்திருந்தால் கூட ஏதாவது கிடைத்திருக்கும். தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு நெல்லை கொள்முதல் செய்தால் கூட செய்த செலவு கூட தங்களுக்கு மிஞ்சாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி