காஞ்சி தெற்கு மாவட்டம் கருங்குழி பேரூர் திமுக சார்பில் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தசரதன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அறுசுவை உணவை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.