இந்நிலையில், ஏரியிலிருந்து எடுக்கப்படும் மண் பொன்விளைந்தகளத்தூர் பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் சின்னம்மாள் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியில் கொட்டப்பட்டு வருவதாக பொன்விளைந்தகளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் வயலில் ஏரி மண்ணுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜேசிபிகள், இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து வந்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் திமுக ஒன்றிய கவுன்சிலர் சின்னம்மாளை கைது செய்தனர். தொடர்ந்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு