கார் கண்ணாடியை உடைத்து பணம், நகை, செல்போன் திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் மயிலாடுதுறை மாவட்டச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் சென்னைக்கு குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது மேல்மருவத்தூர் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக கோவில் அருகே காரை நிறுத்திவிட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காரின் பின் வலது பக்க கண்ணாடி உடைத்திருந்தது தெரியவந்தது.

உள்ளே வைத்திருந்த மூன்று சவரன் நகை பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் ஒரு லட்சம் மதிப்புள்ள ஐபோன் திருடு போனது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி அருகில் உள்ள மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் சம்பந்தமாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மேல்மருவத்தூர் போலீசார் கார் கண்ணாடி உடைத்து திருடிய மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி