செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் நகர் பகுதியில் மதுராந்தகம் நகரக் கழக செயலாளர் பூக்கடை சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள 24 வார்டுகளிலும் வலம் வந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எம்பி. சீனிவாசன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
இதேபோன்று கருங்குழி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் இரு சக்கர வாகனம் ஆட்டோ நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.