சென்னை ரெட்கில்ஸ் - புழல் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வளர்த்து வரும் அவரது அண்ணன் குழந்தைகளான 10 வயது இரட்டையர் சிறுமிகள், கோடை விடுமுறையையொட்டி தாம்பரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, ஏசி பழுது பார்க்க வந்த கார்த்திக் (28) என்பவர் இரு சிறுமியரிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியர் பாட்டியிடம் தெரிவித்ததை அடுத்து, கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கார்த்திக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து மே 28 அன்று சிறையில் அடைத்தனர்.