வெற்றிவேலுக்கு நீச்சல் தெரியாததால், கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது, தண்ணீரில் மூழ்கினார். உடன் குளித்தவர்கள், அவரை மீட்க முயற்சித்தும் முடியவில்லை. உடனே, கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற செய்யூர் தீயணைப்பு மீட்புப் படையினர், கிணற்றில் மூழ்கிய வெற்றிவேல் உடலை மீட்டனர்.
அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிந்து, வாலிபரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.