காஞ்சியில் பேருந்து டயர் வெடித்து தடுப்பில் மோதி 8 பேர் காயம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, பூந்தமல்லி நோக்கி அரசு பேருந்து, நேற்று, மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்தை ஓட்டுநர் கார்த்திகேயன், (57), ஓட்டிச் சென்றார். பொன்னேரிக்கரை மேம்பாலத்தில் இறங்கும்போது, முன்புற டயர் வெடித்ததால், நிலைதடுமாறி மேம்பாலத்தின் வலதுபுறத் தடுப்பில் மோதி நின்றது. 

இதில், அரசு பேருந்தில் பயணம் செய்தவர்களில், ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் என, 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த பேருந்து விபத்தின்போது, ஓட்டுநர் மொபைல் போன் பேசியதாக பயணியர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி