செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா, சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கோவிலம்பாக்கம் ஊராட்சி, பாகம் எண் 490 பெரிய கோவிலம்பாக்கம் பகுதியில் இன்று (நவ. 7) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணியை நேரில் பார்வையிட்டார். பூத் லெவல் அதிகாரி (BLO) காயத்ரி வாக்காளர்களுக்கு வழங்கிய படிவத்தை ஆய்வு செய்து, பூர்த்தி செய்யும் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.