இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும், மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அப்பிரிவு போலீசார், துஷாந்தினி, அருண்குமார் ஆகியோரிடம் விசாரித்தனர்.
அப்போது, இலங்கை பாஸ்போர்ட்டில் 2009ல் இந்தியா வந்த இவர்கள், போலி ஆவணங்கள் வாயிலாக, நம் நாட்டு பிரஜைபோல, ரேஷன் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெற்று உள்ளனர். அதன் வாயிலாக, பாஸ்போர்ட் பெற்று, இலங்கைக்கு செல்ல முயன்றது தெரியவந்தது. இருவரையும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.