செங்கல்பட்டு மத்திய மாவட்டம் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கு ஆவணங்களை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், கொலை வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காமல் அலட்சியம் காட்டி, கொலை குற்றவாளிகளை ஜாமீனில் விட முயற்சிக்கும் தமிழக அரசையும் காவல் துறையையும் கண்டித்து, மாநில அரசு மத்திய அரசு என்று கோஷங்கள் எழுப்பினர். நீதி வேண்டும்! JAR BHIM நீதி வெல்லும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.