பிரமோற்சவ விழா கடந்த 31.05.2025 அன்று காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக தேனுகாம்பாள், தேனுபுரீஸ்வரர் ராஜ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியதலைவர் அருண்ராஜ், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா உள்பட திரளான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்த தேர் இறுதியில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.