இந்த சாலை ஓரத்தில் 200க்கும் மேற்பட்ட 100 ஆண்டுகள் மேலாக இருக்கக்கூடிய பனை மரங்களைக் கொண்ட சாலை வழியாக இந்த மின் கம்பங்கள் கொண்டு மின்வினியோகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது இரண்டு ஆண்டுகளாக பலமுறை சூறாவளிக்காற்று காரணமாக பனை மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் சாய்ந்து உடைந்து விழுந்து விபத்துகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு மின் ஊழியர் பலியாகியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வீசிய காற்றால் மூன்று பனை மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் சேதமடைந்து மின்தடையும் ஏற்பட்டிருந்தது. ஆகவே இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் அதே சாலை வழியாக மின் கம்பம் நடப்பட்டு மின்சாரம் கொண்டு வர கிராம மக்களும் ஊராட்சி நிர்வாகமும் பலமுறை மின்வாரியத்திடமும் மாவட்ட ஆட்சியர் இடம் மனு கொடுத்திருந்தனர். இதனால் மீண்டும் மின்வாரியத் துறை அதிகாரிகள் பணி மேற்கொண்ட போது கிராம மக்கள் இந்த பணிகளை மேற்கொள்ளக் கூடாது எங்களுக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.