தற்போது, வேறு பயன்பாட்டிற்காக கட்டடம் முழுதும் இடிக்கும் பணி நடந்து வருகிறது. சாலையோரம் உள்ள கட்டடத்தில், எந்த ஒரு பாதுகாப்பு தடுப்பும் அமைக்காமல், இடிக்கப்படுவதால், அதிலிருந்து வெளியேறும் துகள்கள், காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
அதேபோல், சாலையோரம் நடந்து செல்வோர் மீது, கட்டட துகள்கள் விழுவதால் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, பாதுகாப்பான முறையில் தடுப்பு அமைத்து, கட்டடத்தை இடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.