இந்நிலையில், இச்சாலையையொட்டி, பயன்படுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டில்கள், சிரஞ்ச், மாஸ்க், கிளவுஸ் ஆகிய மருத்துவக்கழிவை மர்ம நபர்கள் கொட்டிச் செல்கின்றனர். அவ்வப்போது கொட்டப்படும் மருத்துவக் கழிவை தீயிட்டு கொளுத்தியும் வருவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரத்தில் மருத்துவக்கழிவு கொட்டுவோர் மீது, நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.