கீழவலம் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு

மதுராந்தகம் அருகே இயங்கி வரும் அரசு மதுபான கடையின் சுவற்றில் துளையிட்டு மது பாட்டில்கள் திருட்டு 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழவலம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் நேற்று (பிப்.4) நள்ளிரவில் சில மர்ம நபர்கள் மதுபான கடையின் சுவற்றை துளையிட்டு மதுபானங்கள் திருடிக்கொண்டு இருந்தபொழுது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட மதுராந்தகம் காவல் நிலைய போலீசார் கடைக்கு சென்றபொழுது அங்கு திருட்டு நடந்துகொண்டிருந்தவர்கள் போலீசார் கண்டு ஓடிவிட்டனர். 

அதிக அளவில் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை போலீசார் பார்த்ததும் திருடர்கள் ஓடிவிட்டதால் சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மதுபான கடையில் இரண்டாவது முறையாக திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது என குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி