காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தங்கராஜ் (21), அன்பரசன் (23), சிவதாஸ் (44) ஆகிய மூவருக்கு காஞ்சிபுரம் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், தங்கராஜுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.11,000 அபராதமும், அன்பரசன் மற்றும் சிவதாஸுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.5,500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.