செங்கல்பட்டு: உயர்கோபுர மின் விளக்கு பழுது

செங்கல்பட்டு அடுத்த வல்லம் ஊராட்சியில், திருப்போரூர் கூட்டுச் சாலையில், 2012ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறையினர் உயர்கோபுர மின் விளக்கு அமைத்தனர். துவக்கத்தில் மின் விளக்கு பராமரிக்கப்பட்டு வந்தபோது, மக்கள் அச்சமின்றி சென்று வந்தனர். 

கடந்த சில மாதங்களாக உயர்கோபுர மின் விளக்கு எரியாததால், சாலை விபத்துகள் மற்றும் வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு, சாலையில் நடந்து செல்லும் இளம்பெண்களை பாலியல் ரீதியாக மர்ம நபர்கள் சீண்டுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

எனவே போர்க்கால அடிப்படையில் பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள், உயர்கோபுர மின் விளக்கை பழுது பார்த்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.!!

தொடர்புடைய செய்தி