நேற்று முன்தினம் (செப்.,30), தம்பதி இருவரும் பலத்த காயங்களுடன், வீட்டில் மயங்கிய நிலையில் இருந்தனர். கல்லுாரி சென்று திரும்பிய அவர்களது மகள் காவியா, தாய், தந்தை இருவரும் ரத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதை கண்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர், பரமேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, சந்தனகுமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், போலீசார் கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரித்து வந்தனர்.
அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சந்தனகுமாரை விசாரித்தபோது, அவர் தான் தன் மனைவியை கொலை செய்தது தெரிந்தது.