சென்னை மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு வாழைத் தோரணங்கள் கட்டி, பஞ்சவர்ணங்கள் பூசி, பிள்ளைகளின் கண்கவர் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி என பள்ளியின் நூற்றாண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் மாணவர்கள் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் நாற்காலி, நகலெடுப்பான், பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கினர். பின்பு முன்னாள் மாணவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்பு கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா தலைமை ஆசிரியர் உஷா தலைமையில் வழங்கப்பட்டது.
கார்-லாரி மோதல்.. 8 பேர் உயிரிழப்பு