செங்கல்பட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல்

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் ஸ்கார்பியோ காரை செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில் செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து யானை தந்தங்களை பறிமுதல் செய்த செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 8 பேரை கைது செய்து வனத்துறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் யானை தந்தம் கடத்துவதாக ரகசிய தகவலைத் தொடர்ந்து செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் ஆய்வு மேற்கொண்டதாகவும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட எட்டு பேரில் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர், சென்னையைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி