தினமும் ஆயிரக்கணக்கானோர், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ரயிலில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், ரயில் நிலையத்தில் இருப்பு அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டிய அலுவலக பதிவேடுகள், குறிப்பேடுகள், பயணியர் முன்பதிவு விபரம் அடங்கிய குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள், ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு மற்றும் பணியாளர் ஓய்வு அறைக்கு வெளியே கேட்பாரின்றி குப்பை போல போடப்பட்டுள்ளன.
இதனால், ரயில்வே துறைக்கு சொந்தமான ஆவணங்கள் மாயமாகும் சூழல் உள்ளதால், ஆவணங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, பாதுகாப்பின்றி குப்பைபோல போடப்பட்டுள்ள ஆவணங்களை இருப்பு அறையில் வைத்து பாதுகாக்க, காஞ்சிபுரம் ரயில் நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.