செங்கல்பட்டு: காட்டிலிருந்து வெளியேறிய மான் தெரு நாய்கள் கடித்து காயம்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலுார் தாலுகாவில் உள்ள கீரப்பாக்கம் காப்புக் காட்டிலிருந்து அதிகாலை வெளியேறிய ஒரு புள்ளி மான், அசோக்கிரீன் சிட்டி குடியிருப்புக்குள் நுழைந்தது. அங்கு 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மானை விரட்டி கடித்தன. அப்பகுதி இளைஞர்கள் நாய்களை விரட்டி மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் மானை பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி