கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கப்படும் நிலையில், மாணவ - மாணவியருக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
அதேபோல், தொடக்கப் பள்ளிகளான அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் 94 பள்ளிகள், மதுராந்தகம் ஒன்றியத்தில் 131 பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள், 10 நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது, அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் 'எண்ணும் எழுத்தும்' புத்தகம் அனுப்பும் பணி நேற்றுடன் முடிவடைந்தன.
பள்ளி திறப்பு நாளன்று, அனைத்து மாணவ - மாணவியருக்கும் பாட புத்தகங்கள், பள்ளி சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.