ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட, 6 மணி நேரம் 5 நிமிடம் கின்னஸ் உலக சாதனையை முறியடிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் தன் சாதனை முயற்சியை, கடந்தாண்டு மே 12ல், காஞ்சிபுரம் விளையாட்டு அரங்கில், நிகழ்த்தினார். தொடர்ந்து 6 மணி நேரம் 35 நிமிடம் ஹாக்கி மட்டையை ஒரே விரலில் நேர்நிறுத்தி பேலன்ஸ் செய்த சாதனையை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற, விண்ணப்பித்து இருந்தார்.
அதற்கான ஆவணங்கள் சமர்ப்பித்த நிலையில், அருண்குமார் கின்னஸ் சாதனை படைத்த ஆங்கீகாரத்தை, கின்னஸ் நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, தன் குடும்பத்தினருடன் சென்று பாராட்டு பெற்றார். கின்னஸ் சாதனை படைத்த அருண்குமாருக்கு, கலெக்டர் கலைச்செல்வி வாழ்த்து தெரிவித்தார்.