அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இரும்புலி ஊராட்சி தலைவர் சூரியகலா, மேலமையூர் ஊராட்சி தலைவர் ஹெலன் சந்தியா உள்ளிட்ட ஆறு பேர்கள் தேர்வு செய்யப்பட்டு, புதுடில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாகவியல் நிறுவனம் சார்பில், தலைமைத்துவம் மற்றும் மேலாண்மை குறித்து, ஐந்து நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஏப்ரல் 28 முதல் கடந்த 2ம் தேதி வரை நடந்த இந்த பயிற்சியில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு, வழிகாட்டல், முடிவெடுத்தல், ஊக்குவித்தல், சிக்கலைத் தீர்க்கும் திறன், திட்டமிடல், நேரம் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திறன்களை மேம்படுத்துவது குறித்து, இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.