மதுராந்தகம்: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் கோபால கண்ணன் மதுராந்தகம் ஊராட்சியில் அடங்கிய வையாவூர் ஊராட்சியில் தலைவர் துணைத் தலைவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த ஊராட்சியில் 203 ஊராட்சி சட்ட பிரிவின் கீழ் வரவு செலவுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால கிருஷ்ணன் அவர்கள் கணக்கினை மேற்கொண்டு வருகிறார். இதில் வீடு கட்டுவதற்கான திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மேலும் செலவு கணக்குகளை தவறாக பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளதாகவும் வந்த புகாரின் காரணமாக இந்த ஊழல் ஒழிப்புப் போலீசார் தற்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி