செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து காரில் இரண்டு பேர் பாண்டிச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி மற்றொரு காரில் ஐந்து நபர்கள் சென்றபோது முட்டுக்காடு ரோஸ் ஹோட்டல் அருகே இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த செய்யூர் போலீசார் விபத்தில் காயமடைந்த ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சை பெற்ற நபர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து செய்யூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.