இதை தடுக்க தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிக்கப்பட்டு மக்கள் அவதியுற்று வருவதை கண்டும் காணாமல், காஞ்சிபுரம் மாநகராட்சி வேடிக்கை பார்த்து வருகிறது. இதை கண்டித்தும், சொத்து வரி உயர்வு, குடிநீர், கழிவுநீர் அகற்றும் கட்டணங்கள் உயர்வு, தொழில் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மோசமான சாலைகள் என்று, மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் தி.மு.க., அரசைக் கண்டித்தும், காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் வரும் 18ம் தேதி, காலை 10 மணியளவில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கும். முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், சோமசுந்தரம் ஆகியோர் இதில் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு