நேற்று, கல் குவாரி பகுதி அருகே, அனுமதியின்றி மண் எடுத்துச் செல்வதாக, ஒரத்தி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது.
தகவலை அடுத்து, சப் - இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார், ஆனைகுன்றம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆனைகுன்றம் பகுதியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு வந்த டிராக்டரை மடக்கி பிடித்தனர்.
பின், டிராக்டரை ஓட்டி வந்த வெங்கடேசனை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் கிளைச்சிறையில் அடைத்தனர்.
டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.